ஆஸ்திரேலியா செய்தி

விக்டோரியாவில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து

  • January 16, 2026
  • 0 Comments

விக்டோரியா மாநில பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதாரம் சார்ந்த ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால், ஆயிரக்கணக்கான திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள 3.75 சதவீத சம்பள உயர்வு போதுமானதல்ல எனக் கூறி, 6 சதவீத உயர்வைக் கோரி துப்புரவு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை கருவிகளைக் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் முடங்கியுள்ளதோடு, அவசரமற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை சிகிச்சைகள் முற்றாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. […]

இலங்கை

நிதியை வீணடித்த பிரதமர் – இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

  • January 16, 2026
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமர சூரிய மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாயை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றஞ் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேற்படி   முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகள் எப்போதும் இலஞ்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடளிக்கலாம். கல்விக்குப் […]

இலங்கை செய்தி

போரால் பாதிக்கப்பட்ட 2,500 குடும்பங்களுக்கு வீடு: திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அநுர!

  • January 16, 2026
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த […]

இலங்கை

உக்ரைனுக்கு 20 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் பிரித்தானியா!

  • January 16, 2026
  • 0 Comments

உக்ரைனில் மின் கட்டமைப்பை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் 20 மில்லியன் பவுண்டுகளை வழங்க பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் “100 ஆண்டு கூட்டாண்மை”யின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 300 பாடசாலைகளை உருவாக்கவும் உறுதிபூண்டுள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva) கியேவில் உள்ள உயர் உக்ரைனிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளதுடன், ரஷ்யாவின் தாக்குதல்களினால் சேதமடைந்த மின் கட்டமைப்பையும் பார்வையிட்டுள்ளார். மேலும் முக்கிய நகரமான குபியன்ஸ்கை (Kupiansk) மீண்டும் பெறுவதற்கான போரில் உயிரிழந்த ஒவ்வொரு […]

இலங்கை

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தேரர்களை பார்வையிட்டார் விமல்!

  • January 16, 2026
  • 0 Comments

திருகோணமலை கடற்கரையில் அனுமதி இல்லாமல் கடலோரப் பாதுகாப்பு சட்டங்களை மீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பௌத்தபிக்குகளை விமல்வீரவன்ச சந்தித்துள்ளார். திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர், தேரர்களை சந்தித்துள்ளார். தொடர்புடைய செய்தி திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பௌத்த பிக்கு உட்பட 08 பேருக்கு விளக்கமறியல்!      

உலகம் செய்தி

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை

  • January 16, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol), அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களுக்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட தோல்வியடைந்த இராணுவச் சட்ட அமுலாக்கம் தொடர்பான வழக்குகளில் வெளியாகியுள்ள முதல் தீர்ப்பு இதுவாகும். இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கத் தவறியது மற்றும் தனது கைதை மறைக்க ஆவணங்களைத் […]

அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்தில் “டித்வா புயல்”!

  • January 16, 2026
  • 0 Comments

டித்வா புயல் சம்பந்தமாக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளதென தெரியவருகின்றது. டித்வா புயல் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும், உரிய முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எங்கே தவறு நடந்துள்ளது, பொறுப்பு கூற வேண்டியது யார் என்பது தொடர்பில் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்நிலையில் தெரிவுக்குழு அமைப்பதற்குரிய யோசனை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. […]

செய்தி

அழகு தமிழ் பேசிய அநுர: சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்த காணொளி!

  • January 16, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake யாழ்.மண்ணில் நடை பயிற்சியில் ஈடுபடும் காணொளி வைரலாகியுள்ளது. தனக்கு காலை வணக்கம் சொன்ன இளைஞர் ஒருவருக்கு ஜனாதிபதி தமிழில் பதில் அளிப்பதும் பலரது பாராட்டடை பெற்றுள்ளது. தைப்பொங்கல் நிகழ்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு Jaffna பயணம் மேற்கொண்டுள்ளார். பொங்கல் நிகழ்வுகளில் நேற்று பங்கேற்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி நடை பயிற்சியில் ஈடுபட்டார். அவரை சூழ […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பே அவசியம் – விமல்

  • January 16, 2026
  • 0 Comments

” நாட்டில் கல்வி மறுசீரமைப்பென்பது Education reform சிறப்பான பண்புகளுடன் இடம்பெற வேண்டும் என்பதை ஏற்கின்றோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa தெரிவித்தார். எனினும், கட்சியொன்றின் தேவைக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையை ஏற்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கை. அப்பணியை முன்னெடுக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது இரண்டாவது விடயமாகும். எனவே, எமது முதலாவது […]

இந்தியா

திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்திய மோடி!

  • January 16, 2026
  • 0 Comments

திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று விடியோவொன்றை வெளியிட்டுள்ளார். திருவள்ளுவர் நாளை முன்னிட்டே அவர் இவ்வாறு விடியோ வெளியிட்டுள்ளார். தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் தெய்வப் புலவராம் திருவள்ளுவரை நினைவுகூரும் வகையில் திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் […]

error: Content is protected !!