புதிய கணக்காய்வாளர் நாயகம்: மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்து, கூட்டாக கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கமைய மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை அப்பதவிக்கு நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல் நீண்டகாலமாக இப்பணியிடம் வெற்றிடமாக இருப்பது பொது நிதி நிர்வாகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெளியிலிருந்து ஒருவரை நியமிப்பதற்குப் பதிலாக, உள் கட்டமைப்புக்குள் இருந்தே ஒருவரைத் தெரிவு செய்வது நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு உகந்தது […]













