லண்டன் பொன்விழா மாநாடு – உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகை
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) சர்வதேச பொதுச் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் நாளை இலங்கைக்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வருடம் லண்டன் மாநகரில் இடம் பெறவுள்ள இயக்கத்தின் 50 ஆவது சர்வதேச மாநாடு தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படவிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அவர் இலங்கை கிளையினருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை செல்லும் பொதுச் செயலாளர் நாயகம் இலங்கையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.உரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]













