உலகம் செய்தி

அமெரிக்காவில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி தம்பதியினர் கைது

  • January 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவின்(America) வர்ஜீனியாவில்(Virginia), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் மூன்று பேர் போதைப்பொருள், பாலியல் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு வர்ஜீனியாவில் உள்ள ஃபெடரல் வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, 52 வயதான கோஷா சர்மா(Gosha Sharma) மற்றும் 55 வயதான தருண் சர்மா(Tarun Sharma) ஆகியோர் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பல ரகசிய நடவடிக்கைகளுக்குப் பிறகு, அவர்களது இடத்தில் கூட்டாட்சி மற்றும் உள்ளூர் முகவர்கள் சோதனை நடத்திய பின்னர் கைது […]

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் மரணம்

  • January 19, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான்(Afghanistan) தலைநகர் காபூலில்(Kabul) நடந்த குண்டுவெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஷாஹர்-இ-நாவ்(Shahr-e-Naw) வணிகப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் குண்டுவெடிப்பு நடந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வணிக பகுதியில் பெரிய அலுவலக கட்டிடங்கள், ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் தூதரகங்கள் உள்ளன. “காபூலில் உள்ள எங்கள் அறுவை சிகிச்சை மையத்தில் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஷாஹர்-இ-நாவ் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து இருபது பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏழு பேர் வருகையிலேயே உயிரிழந்துவிட்டனர்” என்று […]

உலகம் செய்தி

3 மணித்தியாலங்களுக்கு மட்டும் இந்தியா வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி

  • January 19, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரக(United Arab Emirates) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்(Sheikh Mohammed bin Zayed Al Nahyan) இன்று இந்தியாவிற்கு திடீர் விஜயம் ஒன்று மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியை பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) டெல்லி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றுள்ளார். இந்த வருகை குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட மோடி, “எனது சகோதரரான ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் அனைத்து வீடுகளுக்கும் மீண்டும் தடையின்றி நீர் விநியோகம்

  • January 19, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் கென்ட் மற்றும் மேற்கு சசெக்ஸில் வார இறுதியில் ஏற்பட்ட மற்றொரு மின் தடைக்குப் பிறகு, அனைத்து வீடுகளுக்கும் நீர் மீண்டும் விநியோகிக்கப்பட்டதாக தென்கிழக்கு நீர் வழங்கல் நிறுவனம் அறிவித்துள்ளது. குழாய் பழுது பார்ப்பு பணிகளுக்கு பிறகு நீர் விநியோகம் இடம்பெற்றதாக அந்த நிறுவனத்தின் முகாமையாளர் மேத்யூ டீன் தெரிவித்துள்ளார். மேலும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் தென்கிழக்கு நீர் வழங்கல் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த வாரம், கென்ட் மற்றும் மேற்கு சசெக்ஸில் சுமார் 30,000 […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி விவகாரம் – வெள்ளநீரை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

  • January 19, 2026
  • 0 Comments

செம்மணி புதைகுழி வழக்கில், ஏற்கனவே அகழ்வு இடம்பெற்ற புதைகுழி பகுதியில் தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவது தொடர்பாக, இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கின் தீர்மானங்கள் தொடர்பில், செம்மணி புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் ரனிதா ஞானராஜா மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி புதைகுழி வழக்கு, இன்றைய தினம் (19) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதவான் நீதிமன்ற நீதிபதி […]

பொழுதுபோக்கு

அஜித் ரசிகனாக இருப்பது கஷ்டம்: வைரல் குமுறல்!

  • January 19, 2026
  • 0 Comments

நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக விளம்பரங்களில் நடிக்காமல் இருந்த அவர், தனது ரேஸிங் குழுவிற்காகவும், இந்தியாவில் கார் ரேஸை பிரபலப்படுத்தவும் தற்போது விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக ‘கேம்பா’ (Campa) விளம்பரத்தில் அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தச் சூழலில், அஜித் ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், விஜய் ரசிகராக இருப்பதை […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஜப்பானில் பிப்ரவரி 8ம் திகதி இடைத்தேர்தல்

  • January 19, 2026
  • 0 Comments

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி (Sanae Takaichi) எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற சனே தகைச்சி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார். இந்நிலையில், 64 வயதான சனே தகைச்சி பிப்ரவரி 8ம் திகதி இடைத்தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு குறித்த மக்களிடையே நிலவும் கவலைகளுக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவை குறிவைக்கும் ரஷ்ய சைபர் போர் – இணைய சேவைகள் முடங்கும் அபாயம்

  • January 19, 2026
  • 0 Comments

ரஷ்ய சார்பு இணைய குற்றவாளிகளிடமிருந்து கடுமையான சைபர் தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பிரித்தானிய நிறுவனங்களுக்கு எச்சரித்துள்ளனர். பிரித்தானியாவின் உயர்நிலை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான GCHQ இன் ஒரு பகுதியாக செயல்படும் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC), ரஷ்யாவுடன் தொடர்புடைய “ஹேக்டிவிஸ்ட்” குழுக்கள், வலைத்தளங்களை செயலிழக்கச் செய்து, பொதுமக்கள் ஒன்லைன் சேவைகளை அணுகுவதைத் தடுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது. சட்டபூர்வமாக அனுமதி இன்றி கணினி அமைப்புகளை அணுகி அல்லது சேவைகளை முடக்கி அரசியல் […]

உலகம்

அமெரிக்க பிரஜை ஒருவர் ரஷ்யாவில் கைது!

  • January 19, 2026
  • 0 Comments

சார்லஸ் வெய்ன் ஜிம்மர்மேன் (Charles Wayne Zimmerman) என்ற அமெரிக்க பிரஜை ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் சோச்சியில் (Sochi) அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். தற்காப்புக்காக தான் துப்பாக்கியை கொள்வனவு செய்ததாகவும், அது கப்பலில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும்  சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டு சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். […]

செய்தி விளையாட்டு

முழு உடல் தகுதியுடன் ஆஸ்திரேலிய அணியில் இணைந்த டிம் டேவிட்

  • January 19, 2026
  • 0 Comments

20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது. மிட்செல் மார்ஷ்(Mitchell Marsh) தலைமையிலான இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்(Pat Cummins) இடம் பெறவில்லை. மேலும், காயம் குணமடையாததால் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் […]

error: Content is protected !!