நிஜ வாழ்விலும் வீரனாகவே மாறிய ஹிப்ஹாப் ஆதி

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த 2ம் தேதி வெளியான படம் ‘வீரன்’.
ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக வெளியான இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்’ தயாரித்திருந்த இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வீரன் திரைப்படம் குழந்தைகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இதில் குழந்தைகள் பலரும் கலந்து கொண்டு படத்தை கண்டு ரசித்தனர்.
அப்போது ஹிப்ஹாப் ஆதி குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வீரன் கதாப்பாத்திர காஸ்டியூமில் வந்து ஆச்சரியப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
(Visited 13 times, 1 visits today)