இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : இணையம் ஊடாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்!

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் நுழைந்து அவர்களது பணத்தை தனது வங்கிக்கு மாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 7 கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை கைதுசெய்ததையடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கம்பஹா, கஸ்பேவ, ராகம, வெயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹாகொட கேகாலை, அநுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 9 times, 1 visits today)