பிரித்தானியாவின் பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு – மஞ்சள் எச்சரிக்கை அமுலில்!

பிரித்தானிய மக்கள் பலத்த மழை மற்றும் புயல் நிலமைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேல்ஸ், வடக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸ் முழுவதும் மணிக்கு 75 மைல் வேகத்தில் காற்று வீசும் எனவும் சில பகுதிகளில் 80 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும் எனவும் மெட் அலுவலகம் முன்னுரைத்துள்ளது.
அத்துடன் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயத்திற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 40 இற்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் அமுலுக்கு வந்துள்ளன. மேலும் வேல்ஸில் 20 இற்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வார இறுதி முழுவதும் இந்த வானிலையே தொடரும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அத்துடன் வாகனம் ஓட்டுவதில் சிரமமான சூழ்நிலைகள், மின்வெட்டு மற்றும் பயண இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘குறைந்த காற்றழுத்தப் பகுதி கிழக்கு நோக்கி நகர்வதால், குறுகிய காலத்தில் பலத்த, பலத்த காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது என தலைமை வானிலை ஆய்வாளர் மேத்யூ லெஹ்னெர்ட் கூறியுள்ளார்.