உயிருக்கு போராடும் ரீனா… பரபரப்பான இறுதி கட்டத்தில் ஹார்ட் பீட் சீசன் 2

டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான வெப் சீரிஸ் தொடர்களில் ஒன்று ‘ஹார்ட் பீட்’ சீசன் 2.
இந்த தொடரும் விரைவில் முடிவுக்கு வர இருக்கின்றது. இந்த நிலையில், ரீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தீபா பாபுவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘ஹார்ட் பீட்’ சீசன் 2 மருத்துவ உலகம் மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்குள் நடக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு நகர்கிறது.
இந்த வார எபிசோட்களில், ரீனாவின் உண்மையான அப்பா விஜய் தான் என்ற மிகப்பெரிய உண்மையை தெரிந்து கொண்டுள்ளார்.
மேலும், ராஜா ராணி படத்தில் நஸ்ரியாவுக்கு ஏற்பட்ட விபத்து போல் ரீனாவுக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறான உணர்ச்சிகரமான திருப்பங்களால், இந்த வாரக் காட்சிகள் மிகவும் சென்டிமென்டாக மாறியுள்ளன.
ரீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தீபா பாபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு, பார்ப்பவர்களின் நெஞ்சைப் பிழியும் வண்ணம் உள்ளது.
நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்தக் காட்சி குறித்துப் பதிவிட்டு, தீபா பாபுவின் உணர்வுப்பூர்வமான நடிப்பைப் பாராட்டி வருகின்றனர்.
‘ஹார்ட் பீட் 2 தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகும் நிலையில், ரீனா இந்த விபத்தில் இருந்து மீண்டு வருவாரா, அவர் தன் அப்பாவுடன் சேருவாரா என்பதுதான் அடுத்தடுத்த எபிசோட்களில் இருக்கப்போகும் எதிர்பார்ப்பு…