பொழுதுபோக்கு

ரீனாவின் உயிர் பிரிந்தது? உண்மையை அறிந்த விஜய்… இந்த வாரம் ஹார்ட் பீட்…

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான வெப் சீரிஸ் தொடர்களில் ஒன்று ‘ஹார்ட் பீட்’ சீசன் 2.

ஹார்ட் பீட்’ சீசன் 2 மருத்துவ உலகம் மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்குள் நடக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு நகர்கிறது.

சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றார்கள்.

உலகளவில் இந்த தொடருக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவிக்கின்றனர். அந்த வகையில் இந்த சீசனும் முடிவுக்கு வர இருக்கின்றது.

இந்த நிலையில், வாரத்துக்கு வாரம் இந்த தொடரில் பல சுவாரஸ்யமான தகவலும் சர்ப்ரைஸ்களும் நிறைந்திருக்கின்றன.

மேலும் எதிர்பாராத டுவிஸ்ட்களும் இருக்கின்றன. கடந்த வாரம் ரீனாவுக்கு தன் தந்தை யார் என்ற உண்மை தெரிந்துவிட்டது.

அதேநேரம் ராஜாராணி சீரியலைப்போன்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ரீனாவின் நிலையைக் கண்டு அர்ஜூன் அழுவது போன்று எபிசோட் இருந்தது.

இந்த நிலையில் இன்று, ரீனா மரணம் வரை சென்றுவிட்டார். அவரது இதயம் உளளிட்ட முக்கிய உறுப்புகள் அனைத்தும் பாரியளவில் சேதமடைந்துவிட்டன.

ரதி ரீனாவுக்கு மருத்துவம் பார்ப்பதில் இருந்து விலகிவிட்டார். ஒரு தாயால் தன் மகளை அந்த நிலையில் எப்படி பார்ப்பது….

ஆனால் மற்றைய மருத்துவர்கள் தேஜூ, ரோக்கி உள்ளிட்ட அனைவரும் ரீனாவை காப்பாற்ற போராடுகின்றார்கள்.

இதன்போதுதான் விஜய் வருகின்றார். ஆனால் அவரால் ட்ரீட்மன்ட் செய்ய முடியாத நிலை. ஆனால் அவர் இதை விடவில்லை.

அவருடைய நண்பர் மூலம் ரீனாவை காப்பாற்ற முயற்சிக்கின்றார். சத்திரசிக்கை அறையில் ரீனா மரணித்து விட்டதாக நினைத்துவிட்டார்கள். ஆனால் அதிலிருந்தும் அவரை காப்பாற்றிவிட்டவே வேறு வழியை தேடி வருகின்றார்கள்.

இந்த வார எபிசோட்டில், ராக்கி அழுவது, ரதி மற்றும் அர்ஜூனை திட்டுவது பார்ப்போரை இப்படியும் நண்பர்கள் இருப்பாரா என்று நினைக்கத்தோன்றுகின்றது.

அதேபோல் ரீனாவுடனேயே இருக்கும் தேஜூ பழைய நினைவுகளை மீட்டுப்பார்த்து ரீனாவை கட்டிப்பிடித்து அழும் போது நமது கண்களில் இருந்தும் நம்மை அறியாமலேயே கண்ணீரை வரவைத்து விட்டது.

ஆக இந்த எபிசோட்டில் இறுதியாக விஜய்க்கு தன் மகள்தான் ரீனா என்ற உண்மை தெரியவந்துள்ளது.

தன் மகளை பார்த்துநான் தான் ரீனா உன் அப்பா வந்திருக்கேன். இந்த சேர்ஜரிக்குப் பிறகு உனக்கு புது ஜென்மம் காத்திருக்கு. உனக்காக உன்னோடு நான் இருப்பேன். உன் அப்பா இருப்பேன்என்று விஜய்சொல்வதை யாராலும் அழாமல் பார்க்கவே முடியாது.

இனி அடுத்த எபிசோட்களில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

 

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்