பொழுதுபோக்கு

ஓடிடியில் வெளியானது ஹன்சிகாவின் மை3 வெப் தொடர்

சாந்தனு, ஹன்சிகா மற்றும் முகேன் ராவ் நடித்துள்ள மை3 வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ். கடந்த 2019-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது.

அதன் பிறகு 2021-ல் அவர் இயக்கிய ‘வணக்கம்டா மாப்பிள்ளை’ படமும் ரசிகர்களிடம் சேரவில்லை.

இதையடுத்து, அவர் வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இதற்கு மை3 என பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஹன்சிகா மோத்வானி, சாந்தனு, ஜனனி, முகேன் ராவ், உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரொமேன்டிக் காமெடி கதைக் களத்தில் இந்த தொடர் உருவாகியுள்ளது. மை3 வெப் தொடரின் முன்னோட்டம் அண்மையில் வெளியான நிலையில், தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் முழு வெப் தொடரும் வெளியாகி இருக்கிறது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content