‘ஜன நாயகன்’ படத்திற்காக ஹெச் வினோத்திடம் விஜய் போட்ட கண்டிஷன்..
கோலிவுட் திரை உலகில், ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் தற்போது நடிப்புக்க முற்றுப்புள்ளி வைத்து விட்டு அரசியலில் குதித்து விட்டார்.
தன்னுடைய கட்சி கொடி, கட்சியின் பாடல், என துவங்கி… தற்போது மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.
முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் கங்குவா, அனிமல், போன்ற படங்களில் நடித்து பிரபலமான பாபி தியோல் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ், மமீதா பைஜூ, டிஜே அருணாச்சலம், உள்ள மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு தீபாவளியை குறிவைத்து, அக்டோபர் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் அவ்வபோது இந்த படக் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது, இயக்குனர் ஹெச் வினோத், நடிகர் விஜய் இந்த படத்தில் நடிக்கும் முன் தனக்கு வைத்த டிமாண்ட் குறித்து பேசி உள்ளார். இந்த படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்ட பின்னர், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் என்னை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய டிமாண்ட் ஒன்றை வைத்தார். விஜய் தன்னிடம் பேசும் போது ” என்னுடைய படத்தை, அனைத்து வயதினரும், அரசியல் கட்சியினரும் பார்க்கும்படி இருக்க வேண்டும். அதனால் இப்படத்தில் யாரையும் தாக்கும் வகையில் காட்சிகளை வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இந்த தகவலை சமீபத்தில் இயக்குனர் ஹெச் வினோத் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.