OTTயில் பட்டையை கிளப்ப தயாராகியது GOAT
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆனது.
கோட் படத்துக்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்குகளையும் கோட் திரைப்படம் ஆக்கிரமித்து இருந்தது.
திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய கோட் திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களாக வசூல் வேட்டை நடத்தியது.
அப்படம் இதுவரை உலகளவில் ரூ.410 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது கோட்.
2 வாரங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து இருந்த கோட் திரைப்படத்தை கடந்த வாரம் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் ஓரங்கட்டி உள்ளது. லப்பர் பந்து படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் அதற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, கோட் படத்தின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி கோட் படத்துக்கு கூட்டமில்லாததால் அதற்கு பதிலாக லப்பர் பந்து திரைப்படம் பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கோட் திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், ஓடிடியில் கோட் திரைப்படம் டைரக்டர்ஸ் கட் ஆக ரிலீஸ் ஆக உள்ளது. அதன் மொத்த ரன்னிங் டைம் 3 மணிநேரம் 40 நிமிடம் இருக்குமாம். தியேட்டரில் இடம்பெறாத சீன்கள் ஓடிடியில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.