எதிர்வரும் சில ஆண்டுகளில் உலகளவில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்வரும் சில ஆண்டுகளில் உலகளவில் கருத்தரிப்பு விகிதங்கள் குறையக்கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று அதனைத் தெரிவித்துள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நாடுகளில் போதுமான அளவுக்குக் குழந்தைகள் பிறக்காமல் போய்விடும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
அதனால் அத்தகைய நாடுகளில் மக்கள்தொகை குறையக்கூடும். செர்பியா, ஜப்பான், தென்கொரியா முதலிய நாடுகளில் கருத்தரிப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
அதேவேளையில் ஆப்பிரிக்கா போன்ற குறைந்த வருமான நாடுகளில் பிறப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வாளர்கள் 240 நாடுகளின் நிலைமையை ஆய்வுசெய்து அறிக்கையை வெளியிட்டனர். எதிர்காலத்தைப் பற்றி முன்னுரைக்க அவர்கள் 1950ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான நிலவரத்தை ஆராய்ந்தனர்.
உயரும் விலைவாசி, குழந்தைப் பராமரிப்புச் செலவுகள், வேலை முன்னேற்றம் குறித்த கவலைகள் உள்ளன. இத்தகைய காரணங்களால் பல நாடுகளில் பெண்கள் குழந்தை பெற்றெடுக்கத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.
சில வட்டாரங்களில் அதிகரிக்கும் குழந்தை இறப்பு விகிதமும் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரியவந்தது.
வளரும் நாடுகளில் உடற்பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பலர் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாமல் போவதாகவும் கூறப்படுகிறது.