ஐரோப்பா

விரைவான (Fast-track ) குடியுரிமை திட்டத்தை இரத்து செய்த ஜெர்மனி! சிக்கலில் புலம்பெயர்ந்தோர்!

ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கான விரைவான (Fast-track )  குடியுரிமைத் திட்டத்தை அந்நாட்டு நாடளுமன்றம் இரத்து செய்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அப்போது ஆட்சியில் இருந்த ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான அரசாங்கம் குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவந்திருந்தது.

இதன்கீழ் ஜெர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் 05 ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இருப்பினும் தற்போது ஆட்சியில் உள்ள பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தலைமையிலான அரசாங்கம் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை அமுல்படுத்தி வருகிறது. இதற்கமைய இந்த விரைவான குடியுரிமை திட்டத்தை இரத்து செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் 450 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அத்துடன் 134 பேர் எதிராக வாக்களித்துள்ளனர், மேலும் இரண்டு பேர் வாக்களிக்கவில்லை.

ஜெர்மனியின் தற்போதைய சென்சலரான பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தனது தேர்தல் பிரசாரங்களில் புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவதை முக்கிய வாக்குறுதியாக குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய தற்போதைய நகர்வுகளை அவர் முன்னெடுத்துள்ளார்.

இதேவேளை  சென்சலர் மெர்ஸின் கடுமையான நிலைப்பாடு புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளது.

ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை சட்டவிரோத இடம்பெயர்வு உள்ளீடுகள் 22,170 ஆகக் குறைந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 83,572 ஆகவும் 2023 இல் 127,549 ஆகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!