பொழுதுபோக்கு

விஜய் – யுவன் காம்போ செட்டாகல.. விஜய் ரசிகர்களே குமுறல்.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்

கோட் படம் வெளியான பிறகு அதிர்ச்சி ரெடியாக இருக்கும் என்பதை ரசிகர்கள் இப்போதே கணிக்க ஆரம்பித்து விட்டனர்.

வெங்கட் பிரபுவை நம்பி விஜய் இந்த படத்தை கொடுத்திருக்கக் கூடாது என்றும் புதிய கீதை படத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக தவிர்த்து வந்த யுவன் சங்கர் ராஜா கூட்டணியையும் விஜய் அனுமதித்திருக்கக் கூடாது என விஜய் ரசிகர்களே குமுறி வருகின்றனர்.

வெங்கட் பிரபு டைட்டிலை மட்டும் தாறுமாறாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என வைத்து விட்டு வெளியாகும் ஒவ்வொரு விஷயங்களிலும் இப்படி கோட்டை விட்டு வருகிறாரே என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

பல விஜய் ரசிகர்களுக்கே கோட் படத்தின் 3வது சிங்கிள் பாடலும் கவரவில்லை என்கின்றனர். ஏற்கனவே கேட்ட அதே குத்து பாடல் மாதிரி உள்ளதாகவும் குத்து பாடலில் ஒரே பீட் தான் போட முடியும் என யுவன் சங்கர் ராஜா அளித்த பழைய பேட்டியையும் ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

பாடலை ரசிக்க முடியாமல் போக மிக முக்கியமான காரணமே விஜய்யின் டீ ஏஜிங் லுக் தான் என்கின்றனர். ரொம்பவே செயற்கைத்தனமாக கார்ட்டூன் பொம்மை போலவே உள்ளதாகவும் வெங்கட் பிரபு கதையில் விஜய்யை க்ளோனிங் அல்லது ரோபோவாக காட்டினால் மட்டுமே ரசிகர்கள் இந்த லுக்குடன் ஒன்றிணைவார்கள் என்றும் மகன் விஜய்யாகவே காட்டினால் கதை கந்தலாகி விடும் என்றும் கூறுகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்