இனிமேல் ஹீரோ தான்… நோ வில்லன்… நடிப்பு இராட்சசன் பகீர் அறிவிப்பு
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபஹத் பாசில். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் வெரைட்டியான கேரக்டரில் நடித்து வருகிறார்.
அதேநேரம் தமிழில் கெஸ்ட் ரோல், வில்லன் கேரக்டர்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால், விரைவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் ஃபஹத்.

ஃபஹத் பாசில். ஆரம்பத்தில் பல தோல்விப் படங்களில் நடித்து சினிமாவில் இருந்து பிரேக் எடுத்திருந்த ஃபஹத், மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து வெரைட்டியாக மிரட்டி வருகிறார். ஹீரோ, வில்லன், சைக்கோ, காமெடி, கேமியோ ரோல் என இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை.
எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பில் வெளுத்து வாங்கும் ஃபஹத் பாசிலுக்கு, மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். நடிகை நஸ்ரியாவை காதல் திருமணம் செய்துகொண்ட பின்னர் ஃபஹத்தின் கேரியர் இன்னும் உச்சம் தொட்டது.

தற்போது தெலுங்கில் புஷ்பா 2ம் பாகத்தில் நடித்து வரும் ஃபஹத், தமிழிலும் மாஸ் காட்டி வருகிறார். முதலில் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்த ஃபஹத், கடந்தாண்டு கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் அமர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.
ரத்னவேலு என்ற கேரக்டரில் ஃபஹத்தின் நடிப்பு செம்ம மிரட்டலாக இருந்தது. முக்கியமாக ஒவ்வொருமுறையும் மாமன்னன் படத்தின் அப்டேட்ஸ் வரும் போதும் ஃபஹத் பாசிலின் பெயர் தான் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது.

படத்தின் ஹீரோ உதயநிதியை விடவும் ஃபஹத்துக்கு தமிழில் அதிகம் ரசிகர்கள் இருந்தனர். அதேபோல், மாமன்னன் வெளியான பின்னரும் ஃபஹத்தின் நடிப்புக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதுவரை தமிழில் வில்லனாக நடித்த ஃபஹத், இனி ஹீரோவாக நடிக்கும் ஆசையில் இறங்கிவிட்டாராம்.

சினிமாவில் ஜாதி வேண்டாம். படித்தவர்களுக்குக் கூட மூளை இல்லை. சாடிய திரை பிரபலம்! இதற்காக தமிழில் சில முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஃபஹத் பாசில் படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் ரெடியாக இருக்கின்றன.
இதனால், விரைவில் ஃபஹத் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த தகவலால் கோலிவுட் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்பில் உள்ளனர்.
https://twitter.com/Nazriya4U_/status/1675904652989046794





