பொழுதுபோக்கு

ஜீ விருதுகள் : ஒரே ஒரு கேள்வியால் முழு அரங்கையும் அழ வைத்த அர்ச்சனா…!

தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், சரிகமப போன்ற ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

ஜீ தமிழ் குடும்பத்தில் பணியாற்றி வரும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரது திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் ஜீ தமிழ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஜீ குடும்ப விருதுகள் என்ற பெயரில் விருது விழாவை நடத்தி வருகிறது.

அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டது. இதில் Entertainer of the Year விருது அர்ச்சனாவுக்கு வழங்கப்பட்டது.

அர்ச்சனாவின் அம்மா அண்மையில் உயிரிழந்திருந்த நிலையில், அவருடைய அம்மாவின் முடிமூடியை போட்டுக்கொண்ட சிறுமிகள் இந்த விருதை அர்ச்சனாவுக்கு வழங்கினார்கள்.

அம்மா மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்த அர்ச்சனாவுக்கு இந்த தருணம் மிகவும் வேதனையை கொடுத்தது. இதன்போது தொகுப்பாளர் விஜய்யை பார்த்து அர்ச்சனா கேட்ட ஒரு கேள்வியால் முழு அரங்கமும் கண்ணீரில் மூழ்கியது.

“உன்னிடம் ஒன்று கேட்கின்றேன். எனக்காக செய்வீயா விஜய்? நான் இப்படி நிற்கின்றேன். என் அம்மாவை பின்னால் வந்து கட்டிப்பிடிக்கச்சொல், ஒரே ஒருமுறை அம்மாவை வரச் சொல்” என்று கண்ணீருடன் கூறியதைக் கேட்டு அங்கு அழாதவர்கள் யாரும் இல்லை.

இதேநேரம் உங்கள் அம்மா எப்போதும் உங்களுடன் தான் இருக்கின்றார்,என்று கூறி அர்ச்சனாவை சமாதானப்படுத்தினார் விஜய். அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.

(Visited 4 times, 4 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்