கணவர் மறைவால் தவிக்கும் ஹேமமாலினி : வைரலாகும் உருக்கமான பதிவு
பாலிவுட்டின் பிரபல நடிகர் தர்மேந்திரா நவம்பர் 24 அன்று காலமானார். தர்மேந்திராவின் மறைவுக்குப் பிறகு மனைவி ஹேமமாலினியின் முதல் பதிவு வெளியாகியுள்ளது.
ஹேமமாலினி தனது கணவர் தர்மேந்திராவை நினைத்து ஒரு நீண்ட பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘தரம் ஜி, எனக்கு பல விஷயங்களில் துணையாக இருந்தார். அன்பான கணவர், எங்கள் இரு மகள்கள் ஈஷா மற்றும் அஹானாவின் தந்தை, நண்பர், தத்துவஞானி, வழிகாட்டி, கவிஞர், தேவைப்படும் நேரங்களில் எல்லாம் என்னுடன் இருந்தவர் – உண்மையில், அவர் எனக்கு எல்லாமே.
நல்லது கெட்டது என எல்லா நேரங்களிலும் அவர் என்னுடன் இருந்தார். என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தன்வசப்படுத்தினார், அவர்கள் அனைவர் மீதும் அன்பும் அக்கறையும் காட்டினார்.
பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததால், பல சிறப்புத் தருணங்களை மீண்டும் நினைவுகூர ஏராளமான நினைவுகள் என்னிடம் உள்ளன’ என்று எழுதியுள்ளார்.
ஹேமமாலினி தர்மேந்திராவை நினைவுகூர்ந்து அவருடன் எடுத்த பல புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.






