டியூட் படக்குழு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீபாவளியையொட்டி டியூட், டீசல், மற்றும் பைசன் ஆகிய 3 படங்கள் கடந்த வெள்ளியன்று வெளிவந்தன.
இவற்றில் பைசன் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன. டியூட் படத்திற்கு கலவை விமர்சனங்கள் கிடைத்தாலும் தொடர்ந்து வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
டியூட் படம் வெளியான 3 நாட்களில் மட்டும் ரூ. 66 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரபல டிக்கெட் புக்கிங் தளமான Book My Show வில் மட்டும் டியூட் படத்திற்கு 10 லட்சம் டிக்கெட்டுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டியூட் படத்திற்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பால் படக்குழுவும், பிரதீப்பின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.