பொழுதுபோக்கு

அந்த நாளை மறக்க வேண்டும்… நிம்மதியான மரணம் வேண்டும்… அர்னவ் எமோஷனல்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சீரியல் செல்லம்மா. இதில், அர்னவ் – அன்ஷிதா கதாநாயகர்களாக நடித்து வந்தனர்.

இந்த சீரியல் தற்போது முடிந்துள்ள நிலையில், யூடியூப் ஒன்று பேட்டி அளித்துள்ள அர்னவ் பல விஷயத்தை மனம் திறந்து பேசினார்.

செல்லம்மா சீரியல் மனதிற்கு பிடித்த ஒரு சீரியல், இந்த சீரியல் பட்டிதொட்டி எங்கும் ஓடி எனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது. செல்லம்மா சீரியலில் ஒரு வருடத்திற்கு தான் கதை எழுதப்பட்டது. மக்களிடம் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், அதை இரண்டு வருடத்திற்கு மேல் கொண்டு வந்தார்கள். முடியும் நேரத்திலும் செல்லம்மா சீரியலுக்கு நல்ல டிஆர்பி இருந்தது.

பிக் பாசுக்கு போறீங்களா? எல்லோருமே இதைப்பற்றி கேட்டு விட்டார்கள் நீங்கள் தான் கேட்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,நீங்களும் கேட்டுவிட்டீர்கள், செல்லம்மா சீரியல் முடிந்ததால், நான் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொள்வேன் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் அது வெறும் வதந்தி தான் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என் வாழ்க்கையில் திருமணம் ஆன நாளை மறக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதே போல, நிம்மதியான ஒரு மரணம் வேண்டும். அதுதான் என் ஆசை. உயிரோடு இருப்பதால் தான், அனைத்து பிரச்சனையும் சந்திக்க வேண்டி உள்ளது. இல்லை என்றால் நிம்மதியாக இருக்கலாம்.

போட்டி, பொறாமை, துரோகம் என பல விஷயம் இருக்கு, நானாவது கேமராவிற்கு முன்னாடி நடிக்கிறேன் பலர், வாழ்க்கையில் நடிக்கிறார்கள் எதுக்கு கடவுள் இப்படி பட்ட உலகத்தில் என்னை படைத்தார் என்று, அந்த பேட்டியில் அர்னவ் பல விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

நடிகர் அர்னவ், சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள்,அவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? அவர் யார்? என்ற விவரத்தையும் திவ்யா வெளியில் சொல்லியது இல்லை. இதையடுத்து, இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா அறிவித்து இருந்தார் இதையடுத்து, அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை வயிற்றில் தாக்கியதாகவும் கொடுத்து இருந்தார்.

அந்த புகாரின் பேரில், அர்னவ் மீது கொலை மிரட்டல் வன்புணர்வு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் வந்த அர்னவ் தொடர்ந்து செல்லம்மா சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 56 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!