பொழுதுபோக்கு

மகளால் அவமானப்படும் பிரம்மாண்ட இயக்குனர் – இவருக்கே இப்படி ஒரு நிலையா?

நம்பர் ஒன் இயக்குனராக கொடிக்கட்டி பறக்கும் அந்த பிரபலம் தற்போது வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நொந்து போய் இருக்கிறாராம். சினிமாவை தாண்டி குடும்பத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பவர் தான் அந்த இயக்குனர்.

பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து அழகு பார்த்த அவருக்கு தன் மகள்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் பெரிய ஆசை. அதேபோல் மூத்த மகளுக்கு நல்லபடியாக திருமணமும் செய்து வைத்தார்.

ஆனால் அது சில மாதங்கள் கூட நீடிக்காத நிலையில் பல பிரச்சனைகளை தாண்டி தற்போது வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டார். அதேபோல் இளைய மகளையும் கரை சேர்த்து விட வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம்.

ஆனால் மகளோ நடிக்கத்தான் போவேன் என அடம்பிடித்து ஹீரோயினாக மாறினார். ஆரம்பத்தில் அவரை ரசித்த ரசிகர்கள் இப்போது அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அம்மணியின் வாய் துடுக்கான பேச்சு தான்.

அதேபோல் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் இவர் செய்த ஒரு விஷயம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. எப்படிப்பட்ட இயக்குனருக்கு இப்படி ஒரு மகளாக என பலரும் கழுவி ஊற்றாத குறையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையெல்லாம் எதிர்பார்த்து தான் அந்த இயக்குனர் மகளை படித்த படிப்புக்கு வேலை பார் என்று சொன்னார். ஆனால் அடங்காத மகள் தற்போது சோசியல் மீடியா கிண்டல்களால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறாராம்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்