பொழுதுபோக்கு

100க்கு 100 பொருத்தம் – இளையராஜாவாகவே மாறிய தனுஷ்.. தீயாக பரவும் புகைப்படம்

நடிகர் தனுஷ் அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க உள்ளார். அது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் இளையராஜா படத்தின் அறிவிப்புடன் நடிகர் தனுஷ் லுக்கில் பின்னாடி திரும்பி இருப்பது போன்ற போஸ்டர் வெளியானது.

நிலையில் இளையராஜா போலவே நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜா வாக நடிக்க உள்ளார். இளையராஜாவின் பாடல்கள் தான் தன்னை இதுவரை தனிமையில் இருந்து காத்து வந்தது என்றும், வழிநடத்தியது என்றும், அவரது பாடல்கள் தான் நான் நடிக்கவே உறுதுணையாக இருந்தது என்றும் தனுஷ் உருக்கத்துடன் பேசினார்.

இளம் வயதில் இளையராஜா எப்படி இருந்தாரோ அதே போன்ற லுக்கில் தனுஷ் இருக்கும் படம் ஒன்று இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இது எடிட் செய்யப்பட்ட புகைப்படமா? அல்லது ஒரிஜினல் போட்டோவா என்றே தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

இதே அளவு தோற்றத்துக்கு நடிகர் தனுஷால் மட்டுமே மாற முடியும் என்றும் வயதான தோற்றத்தில் தனுஷ் லுக் எப்படி இருக்கும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content