சிங்கப்பூரில் மனநல பிரச்சினையால் சிக்கி தவிக்கும் மக்கள்

சிங்கப்பூரில் மனநல உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனநல உதவி தேவைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மனநல மருந்தகங்களில் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, மனவுளைச்சலை சமாளிக்கும் வழிகளைப் பற்றிய சுகாதார அமைச்சின் இணையதளத்தை நாடியோர் எண்ணிக்கையும் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம், எழுதும் பழக்கம், உணர்வுகளைப் பகிரும் தைரியம் போன்றவை மனச்சோர்வை எதிர்கொள்ள உதவும் சில எளிய வழிமுறைகள் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
முக்கியமாக, யாராவது உங்கள் பிரச்சனைகளைக் கேட்பது பல நேரங்களில் நிவாரணத்தின் முதல் படியாக இருக்கலாம் என மனநல நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மன அழுத்தத்தை சமாளிக்க மனநலப் பயிற்சிகள், குழு ஆலோசனைகள் போன்றவை பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தனிமையைத் தவிர்த்து, அன்பானவர்களின் ஆதரவை நாடுங்கள் என மனநல நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.