உருகுவே கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் பென்குயின்கள்‘!
கிழக்கு உருகுவே கடற்கரையில் சுமார் 2,000 பென்குயின்கள் இறந்துவிட்டதாகத் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பென்குயின்கள் பறவை காய்ச்சலால் உயிரிழக்கவில்லை எனவும், இந்த விடயம் மர்மமாகவே இருப்பதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மாகெல்லானிக் பென்குயின்கள் அதிகமாக உயிரிழப்பதாகவும், உருகுவேயின் கரையோரங்களில் ஒதுங்குவதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விலங்கினங்கள் துறையின் தலைவர் கார்மென் லீசாகோயன் கூறினார்.
மாகெல்லானிக் பென்குயின்கள் தெற்கு அர்ஜென்டினாவில் கூடு கட்டுகின்றன. தெற்கு அரைக்கோளத்தின் குளிர்காலத்தில், உணவு மற்றும் வெப்பமான நீரைத் தேடி வடக்கே இடம்பெயர்ந்து, பிரேசிலிய மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோவின் கடற்கரையை அடைகின்றது.
பெங்குவின்களைத் தவிர, தலைநகர் மான்டிவீடியோவின் கிழக்கே உள்ள மால்டோனாடோவின் கடற்கரையில் இறந்த பெட்ரல்கள், அல்பாட்ரோஸ்கள், கடற்பாசிகள், கடல் ஆமைகள் மற்றும் கடல் சிங்கங்களை கண்டுபிடித்ததாக டெசோர் என்ற ஆய்வாளர் கூறினார்.