‘கூலி’ படத்துக்கு ஊமைக் குத்து குத்திய ப்ளூசட்டை மாறன்

சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ரிலீசாவதற்கு முன்பே பல்வேறு வகைகளில் விமர்சித்து வந்தார். அந்த விமர்சனங்கள் பெரும்பாலும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.
“கூலி” படத்தின் முன் விளம்பரங்கள் குறித்து மாறன் கிண்டலாக பதிவிட்டு, “முதல் பாதியை பார்த்து அசந்து போன ரஜினி”, “தமிழில் முதல் 1000 கோடி படம் கூலி” போன்ற தலைப்புகளை பட்டியலிட்டு, இவை படத்திற்கு மிகைப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்குவதாக குறிப்பிட்டார்.
ப்ளூசட்டை மாறன், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’, ‘வேட்டையன்’ போன்றவற்றை கடுமையாக விமர்சித்து இருந்தார். கூலி படத்திற்கு முன்பே அவர் தனது விமர்சனங்களை தொடங்கிய அவர் படம் வெளியான பிறகு மேலும் கடுமையாக விமர்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரு மீம்ஸை தனது எக்ஸ்தளப்பதிவில் பகிர்ந்துள்ள அவர், கமல், லோகேஸ் கனகராஜுக்கு கை கொடுப்பதை போன்ற ஒரு மீம்ஸை பகிர்ந்துள்ளார்.
அதன் அர்த்தம் என்னவென்றால் ரஜினிக்கு தோல்வி படத்தை கொடுத்ததற்காக கமல் லோகேஸுக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவிப்பது போன்ற அர்த்தத்தில் பகிர்ந்துள்ளார்.இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.