குக் வித் கோமாளி – 6 : வெற்றி கோப்பையை தட்டி தூக்கிய ராஜூ
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ. 5 லட்சத்துக்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
மேலும், ஷபனா இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி -6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. வார இறுதி நாள்களில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் சமையல் போட்டியில் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டுமின்றி மக்கள் மனங்களைக் கவரும் வகையிலான சிரிப்பு நிகழ்ச்சியாகவும் குக் வித் கோமாளி இருப்பதால், தொடர்ந்து 6வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.
அந்தவகையில் குக் வித் கோமாளி – 6 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் ராஜூ ஜெயமோகன், ஷபானா, உமர் லத்தீப், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும், மிகுந்த உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில், தனது சமையல் திறனால் ராஜூ ஜெயமோகன் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை ஷபானா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.






