தைவானின் நிலைமையை அளவிட சீனா பயன்படுத்தும் புதிய உத்தி

தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை சீனக் கப்பல்கள் ஒளிபரப்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
போராய்வு நிறுவனமொன்றின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான அறிவாற்றல் ஆக்கிரமிப்புகளுக்கு தாய்வானின் பதிலை மதிப்பீடு செய்யும் முயற்சியாக, சீனா இந்த போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, பல சீன மீன்பிடிக் கப்பல்கள் தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது.
உதாரணமாக, ஒரு கப்பல் ரஷ்யப் போர்க் கப்பலாகவும், மற்றொன்று சீனக் கடற்படை சட்ட அமலாக்கக் கப்பலாகவும் தோற்றமளித்ததாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த நடவடிக்கைகள், தாய்வானின் தகவல் சூழலைக் குழப்பும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுவதாக அந்த ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.