பொழுதுபோக்கு

‘சந்திரமுகி 2’ ஹாட் அப்டேட்…. இதோ மற்றுமொரு பாடல் வெளியானது….

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பாடல் வெளியாகி உள்ளது.

பாட்டுகட்டு நல்லா கூத்த கட்டு என இந்த பாடல் ஆரம்பிக்கின்றது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லோரன்ஸ், பொலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். எக்சன் + காமெடி + ஹாரர் ஜேனரில் ‌தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஸ்வகதாஞ்சலி ‘ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் சைதன்ய பிரசாத் எழுத, பின்னணி பாடகி ஸ்ரீநிதி திருமலா பாடியிருக்கிறார். இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!