வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரேசில்(Brazil) சமூக வலைதள பிரபலம்
பிரேஸிலில் இளம் அரசியல்வாதியும், சமூக வலைதள பிரபலமுமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா(Fernanda Oliveira da Silva) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேஸிலின் சாவோ லூயிஸ்(São Luís) நகருக்கு அருகே உள்ள லாகோ வெர்டே பகுதியைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமான பெர்னாண்டா ஒலிவேரா டா சில்வா உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைகளைப் பகிர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
அதேசமயம், கடந்த 2020ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று லாகோ வெர்டே(Lago Verde) நகரின் கவுன்சிலராகப் பதவியேற்றார்.மேலும், 2021 முதல் 2024 வரை இரண்டு முறை மாநகர சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (26) தனது வீட்டில் பெர்னாண்டா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
பெர்னாண்டாவின் திடீர் மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில், லாகோ வெர்டே நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாநகர சபை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.





