புத்தாண்டை இலங்கையில் கொண்டாடிய பிரபல நடிகை பூமிகா… வைரலாகும் படங்கள்
டெல்லியில் பிறந்த நடிகை பூமிகா கடந்த 2000ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை பூமிகா சாவ்லா.
கடந்த 2001ம் ஆண்டு விஜய் நடிப்பில் தயாரான பத்ரி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின் ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம், சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் என அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்தன.
தமிழ் மட்டுமில்லாது போஜ்புரி, பஞ்சாபி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 24 வருடங்களாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை பூமிகா 2024ஆம் ஆண்டின் இறுதியையும், 2025ஆம் ஆண்டின் வரவையும் இலங்கையில் கொண்டாடியுள்ளார்.
ஏராளமான நடிகர் நடிகைகள் ஆங்கில புத்தாண்டை வெளிநாடுகளில் கொண்டாடுவது வழமை. அதிலும் டுபாய் பேர் போன நாடு.
எனினும் நடிகை பூமிகா 2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை இலங்கையில் கொண்டாடியுள்ளார்.
நுவரெலியாவில் உள்ள ரம்பொடை நீர்வீழ்ச்சிப் பகுதியில் அழகை ரசத்தவண்ணம் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.