பிக்பாஸ் சீசன் 9 – டைட்டில் திவ்யா வசமானது
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
மொத்தம் 106 நாட்கள் பயணம், 24 போட்டியாளர்கள் என இந்த சீசன் இருந்தது.
இந்த சீசனில் டைட்டிலை திவ்யா கணேஷ் வென்றார்.
இரண்டாவது இடத்தை சபரிநாதன் பிடித்தார்.
இதில் திவ்யா கணேஷ் வைல்டு கார்டு மூலம் எண்ட்ரி கொடுத்தவர்.
இவருக்கு இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என அவரின் இரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
அதேபோல், சபரிநாதன் இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்து விளையாடி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் சபரிக்கு டைட்டில் இல்லை என்றாலும் இரசிகர்கள் இவரது மனிதாபிமானம், அன்பு, நல்ல எண்ணம், அனைவரையும் அரவணைக்கும் மனப்பான்மை என சபரியின் நல்ல குணநலன்கள் என்பது பலரும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று என பாராட்டி வருகிறார்கள்.





