பிக்பொஸ் சீசன் 09 : இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் ( Red card) கொடுத்த விஜய்சேதுபதி!
தென்னிந்திய சின்னத்திரையில் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக்பொஸ் நிகழ்ச்சியும் ஒன்று.
இதுவரை 09 சீசன்கள் ஒளிபரப்பட்டுள்ள நிலையில், மக்களின் வெறுப்பை அதிகளவு சம்பாதித்த ஒரு சீசனாக இந்த சீசன் காணப்படுகிறது.
குறிப்பாக இந்த சீசனில் போட்டியாளர்களாக வலம் வரும் வி.ஜே.பார்வதி மற்றும் கம்ரூதீன் ஆகியோர் அதிகளவில் வெறுப்பை பெற்றுக்கொண்ட போட்டியாளர்களாக காணப்படுகின்றனர்.
காதல் என்ற பெயரில் இவர்கள் நடந்துகொண்ட விதம் முகம்சுழிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற சீசன்களில் முதல் முறையாக இந்த சீசனில் இருவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.





