விஜய் சேதுபதியின் வேட்டை ஆரம்பம்… 100 நாள் நடக்கும் குழாயடி சண்டை

பிக் பாஸ் சீசன் தமிழில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிக் கொடுத்த கமல்ஹாசன் தான்.
ஆனால் கடந்த சீசனில் இவரால் வர முடியாதுதால் கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்தார். இவரையும் சும்மா குறைச்சு எடை போட முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப விஜய் சேதுபதி வந்த பிறகும் சண்டைக்கு அடிதடிக்கும் பஞ்சமே இல்லை.
அந்த அளவிற்கு விஜய் சேதுபதி யாரிடம் எப்படி கோர்த்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு வந்தார்.
அந்த வகையில் இப்பொழுது ஆரம்பமாகும் 9 ஆவது சீசன் நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார். மேலும் இதுவரை பிக் பாஸ் சீசனில் வெற்றி பெற்றவர்களை விட அதில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் சினிமாவில் பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த லிஸ்டில் கவின், தர்ஷன், சாண்டி மாஸ்டர், லாஸ்லியா. இவர்களுக்கெல்லாம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
அடுத்தபடியாக டைட்டில் வின்னரான ஆரவ், கிடைத்த வில்லன் கதாபாத்திரத்தை சரியாக கொடுத்து அவருக்கான ஒரு அங்கீகாரத்தையும் பெற்று வருகிறது. அதே மாதிரி சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன் ராவ், ஹீரோவாக வலம் வருகிறார். ஆரி அர்ஜுனன் கலைஞர் தொலைக்காட்சியில் வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
அடுத்ததாக ராஜு, பன் பட்டர் ஜாம் படத்திற்கு பிறகு தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார்.
இதே மாதிரி சீசன் ஒன்பதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் சண்டை, காதல் நட்பு கண்ணீர், வன்மம் என அனைத்து உணர்வுகளையும் வைத்து பார்ப்பவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் என்ன மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது விஜய் சேதுபதியின் வேட்டை ஆரம்பம்.