டிரம்பின் பதவியேற்பிற்கு முன் உக்ரேனுக்கு உதவ விரையும் பைடன்
அமெரிக்காவின் 47வது அதிபராக 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதின்று டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார்.
இந்நிலையில், ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரேனுக்கு உதவி வழங்குவது குறித்து அதிபர் டிரம்ப்பின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று இன்னும் தெரியவில்லை.
இதன் காரணமாகத் தம்மால் முடிந்தவரை எவ்வளவு முடியுமோ உக்ரேனுக்கு உதவ தற்போதைய அதிபர் ஜோ பைடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
உக்ரேனின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் பில்லியன் கணக்கான அமெரிக்க டொலரை அனுப்பிவைக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளது.
உக்ரேனுக்கு பைடன் உதவுவதை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.எனவே, அவரது தலைமையின்கீழ் உக்ரேனுக்கு அமெரிக்காவிடமிருந்து உதவி கிடைக்காது என்று சந்தேகிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)