திருமணம் செய்யாமலே இரு குழந்தைகளுக்கு தாயான நடிகை : இறுதியில் நடந்த சோகம்

கன்னட நடிகை பாவனா ராமண்ணா திருமணம் செய்யாமலே கர்ப்பமாகி குழந்தைக்கு தாயாகி உள்ளார். ஆனால், பிறந்த குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்ததால் சோகத்தில் அழுது புலம்பினார்.
இவர் தமிழில் மோகன் நடிப்பில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் அறிமுகமாகி பிரசாந்தின் விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
40 வாயதாகும் பாவனா ராமண்ணாவிற்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும், தாய்மையின் அழகை ரசிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
இதனால்,, ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார். திருமணம் ஆகாததால் பல மருத்துவர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியாக ஐவிஎஃப் சிகிச்சை அளிக்க மருத்துவர் ஒருவர் முன்வர, இரட்டை குழந்தைகளை சுமந்தார்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பாவனா ராமண்ணா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு சோகமும் நிகழ்ந்தது, இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒன்று திடீரென உயிரிழந்தது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், பாவனா ராமண்ணா தனது கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதத்தில் உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்தார். அதாவது, இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு உடல்நலக் குறைபாடுகள் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இதுவே, எட்டாவது மாதத்தில் குறைப்பிரசவத்திற்கு வழிவகுத்தது.
இரட்டைக் குழந்தைகளில் ஒன்று மட்டுமே உயிர் பிழைத்தது. மற்றொரு குழந்தையும் பாவனாவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.