வாழ்வியல்

சோறு வடித்த தண்ணீரில் கிடைக்கும் நன்மைகள்

நாம் நவீன காலத்திற்கு மாறி உள்ளதால் சமையலில் நிறையமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நோய்களிலும் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அரிசி வேக வைப்பதில் அதிகம் மாற்றம் வந்துவிட்டது. அந்த வகையில் நாம் இன்று சாப்பாடு வடித்து சாப்பிடும் போது எவ்வளவு நன்மைகள் உள்ளது என இந்த பதிவில் வாசிப்போம்.

நிறைந்துள்ள சத்துக்கள்:

ஸ்டார்ச் கார்போஹைட்ரேட் தயமின் மற்றும் ரிபோபிலாவின் போன்ற சத்துக்கள் நிறந்துள்ளது.

பயன்கள் :

  • தொடர்ச்சியான வறட்டு இருமல் உள்ளவர்கள் மற்றும் வாய் வறட்சி இருப்பவர்கள்,
  • 500ml சாதம் வடித்த தண்ணீர் 1ஸ்பூன் சாதம் கலந்து 1 மணி நேரத்துக்கு ஒரு முறை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 500ml வீதம் எடுத்து கொள்ள வேண்டும்.
  • சுவாச மண்டலத்தில் பிரச்சனை இருந்தால் அதேபோல் 500ml வடித்த தண்ணீரில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் மிளகு 1/4 ஸ்பூன் சேர்த்து கலந்து குடிக்கவும்.
  • ரத்த சர்க்கரை அளவு அளவு கம்மியாக இருப்பவர்கள் கல் உப்பு சேர்த்து குடித்து வர சரி ஆகும். அதுபோல் ரத்த அழுத்தம் குறவாக இருப்பவர்கள் இதை குடிப்பதன் மூலம் அதிகமாகும்.
  • பித்த தலைவலிக்கு சூடான கஞ்சியை பருக வேண்டும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி கொடுக்கும்.
  • உடல் உஷ்ணத்தை குறைத்து உடம்பை குளிறச்சி படுத்தும்.
  • குறிப்பாக நீர் கடுப்புக்கு சிறந்த அருமருந்தாகும். இதற்கு வடித்த பழைய தண்ணீரை உப்பு போடாமல் பயன் படுத்தவும்.
  • வடித்த தண்ணீரை தலை முடிக்கு தேயித்து வந்தால் நல்ல அடர்த்தியாக வளரும்.
  • மேலும் இதை முக பருவிற்கு பயன்படுத்தினால் பரு மறையும்.
  • சாதம் வடித்த கஞ்சியில் ஒரிசனேஷ் என்னும் பொருள் இருப்பதால் சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும்.
  • உடல் பருமனால் ஏற்படும் குதி கால் வலிக்கு வடித்த சூடு தண்ணீரில் 1/2 மணி நேரம் வைக்க சரி ஆகி விடும்.

தவிர்க்க வேண்டியவர்கள் :

சளி, சைனஸ் பிரச்சனை, எலும்புறுக்கி நோய் மற்றும் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களும், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தவிர்க்கவும். எனவே நாம் வீட்டில் கிடைக்க கூடியவற்றை வீணாகமல் பயன் படுத்தி பயன்பெறுவோம்

(Visited 65 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான