“இந்த சீசனில் யாருமே அப்படி இல்லை“ திவாகர் ஓபன்
பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு முதல் முறையாக தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் வாட்டர் மெலான் திவாகர்.
அதில் அவர் தெரிவிக்கையில்,
ஆக்டிங் ஸ்கில்லை வெளியே காட்ட வேண்டும் என்று தான் வந்தேன் அது நிறைவேறிவிட்டது. வெளியே நடிப்பு திறமையை காட்டுவதற்கும் 42 நாட்கள் எனது நடிப்பு தினசரி தெரிவதற்கும் வித்தியாசம் உண்டு என கூறினார்.
60 நாள் கூட தாங்குமா என்று நினைத்தேன். கேம்ஸ், டாஸ்க்கில் பெரிதாக பங்கேற்கவில்லை. அதனால் தான் வெளியேறிருப்பதாக தெரிவித்தார்.
இதன்போது, ஏன் சண்டை போடும் போது தகுதி, தராதரம் போன்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு,
பிற நபர்கள் நம்மை அவமரியாதையாக பேசும் போது கோபத்தின் உச்சியில் இது போன்று வார்த்தைகள் வந்துவிட்டதாகவும், அதுவும் தப்பான நோக்கத்தில் இல்லை என்று விளக்கமளித்தார்.
டைட்டில் வின்னர் என்று அறிவிக்கும் அளவிற்கு யாரும் நன்றாக விளையாடல, எல்லாருமே சுமாராதான் விளையாடுறாங்க.. யாருனாலும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியே வந்திருவாங்க.. அதான் இந்த சீசனில் யாருமே டஃப்-ஆ இல்ல, இவர் தான் டைட்டில் வின்னர்னு கணிக்கமுடியல என்று கூறினார்.






