ஒரு படத்தின் டீஸரால் விஜய் சேதுபதியின் குடும்ப மானமே போனது…
 
																																		மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி.
தொடர்ந்து படங்கள் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் செம மாஸ் வசூல் வேட்டை நடத்தியது.
தமிழ்நாட்டை தாண்டி சீனாவில் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தி இருந்தது.
சமீபத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸை தனது ஸ்டைலில் தொகுத்து வழங்க நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது.
சமீபத்தில் விஜய் சேதுபதி தனது டுவிட்டரில் Bad Girl என்ற டீஸரை வெளியிட்டிருந்தார்.
அதற்கு சில நபர்கள் தவறான கமெண்ட், அதுவும் விஜய் சேதுபதி குடும்பத்தை வைத்து தவறாக கமெண்ட் செய்துள்ளனர்.
அதனை பார்த்த மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஸ்வா, உங்களுக்கு டீஸர் பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி விமர்சனம் செய்ய உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது.
ஆனால் ஒருவரின் குடும்பத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என கோபமாக பதிவு செய்துள்ளார்.

 
        



 
                         
                            
