ஆயுதத் தடை தளர்த்தப்படாது: ஆர்ஜென்டீனாவுக்கு பிரித்தானியா திட்டவட்டம்.
ஆர்ஜென்டீனாவுக்கு ஆயுதங்கள் விற்கும் தடையை நீக்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடப்பதாக அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மிலி (Javier Milei) தெரிவித்த கருத்தை, பிரித்தானிய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆர்ஜென்டீனாவின் இராணுவத் திறனை மேம்படுத்தும் எந்தவொரு ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது குறித்து “குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை” என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், போக்லாந்து தீவுகளின் இறையாண்மை குறித்தும் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்றும், வர்த்தகம், அறிவியல் போன்ற துறைகளில் மட்டுமே ஒத்துழைப்பை ஆழப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.





