‘அவளோடு இருக்கும் ஒருவித சிநேகிதன் ஆனேன்” வைரலாகும் விக்கி – நயன் படம்…
 
																																		தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா, தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக வலம் வருகிறார்.

கதை, கதாபாத்திரங்களை பொறுத்து ஒவ்வொரு படத்திற்கும் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்.

நயன்தாரா நடிப்பு மட்டுமல்லாமல் வேறு சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களது மகன்கள் உயிர் மற்றும் உலக் ஆகியோரின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவர்களது முகங்களையும் வெளியுலகுக்கு காண்பித்தனர்.

இந்த பிறந்தநாளை கொண்டாடிய கையுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மலேசியாவுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவுடன் விக்னேஷ்சிவன் மலேசியாவில் இரவு நேரத்தில் உலா வரும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ‘அவளோடு இருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
  
  
 
 
        



 
                         
                            
