ஆஸ்திரியாவில் பாடசாலை மாணவர்கள் முகத்தை மூடி ஆடைகள் அணியத் தடை!
பாடசாலைகளில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை ஆஸ்திரியா அரசாங்கம் தடை செய்துள்ளது.
இது பாலின சமத்துவத்திற்கான தெளிவான உறுதிப்பாட்டை” பிரதிபலிப்பதாக கூட்டணி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட சட்டம் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹிஜாப் அல்லது பர்தா போன்ற பாரம்பரிய முஸ்லிம் ஆடைகள் அணிவதைத் தடை செய்கிறது.
இந்தத் தடை அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.
மேற்படி சட்டத்திற்கு இணங்கத் தவறும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் பாடசாலைக்கு சமூகமளித்து விளக்கமளிக்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறும்போது €800 (£700) வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதேபோன்ற கட்டுப்பாட்டை நீக்கியதும் சுட்டிக்காட்டத்தக்கது.





