அமெரிக்க முகாம் மீது தாக்குதல் – கடும் கோபத்தில் பைடன்
ஜோர்தான் – சிரிய எல்லைக்கு அருகில் உள்ள அமெரிக்க முகாம் மீது ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பிராந்திய போரை தொடங்க தனது நாடு விரும்பவில்லை எனவும், ஆனால் இந்த நடவடிக்கைக்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலை நடத்திய குழுக்கள் தண்டிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோர்டானில் உள்ள சிரிய எல்லைக்கு அருகில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியாகுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.