விஜய்யா? நூறு கோடியா? தளபதி முடிவால் ஆசை தம்பி அட்லீ ஹேப்பி
இன்று தமிழ் சினிமாவில் சில வெற்றி படங்களை கொடுத்தவுடன் அவர்களது அடுத்த இலக்கு பாலிவுட்டில் சென்று சாதிக்க வேண்டும் என்பதே. என்னதான் பாலிவுட் என்பது கனவாக இருந்தாலும் அங்கு செல்லும் நம் அன்பர்களுக்கு நெப்போட்டிஸம் தொல்லை தலைவிரித்து ஆடுகிறது. இருந்த போதும் அவை எல்லாவற்றையும் அடித்து தூள் கிளப்பி சாதித்து வருகிறார் நம்ம இயக்குனர் அட்லீ.
சங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து விஜய்யின் பேவரைட் இயக்குனராக தெறி,மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார்.
திறமை இவரை எளிதாக பாலிவுட் தூக்கி சென்றது. அடுத்த படமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலமானார் அட்லீ. ஜவானனை தமிழ் ரசிகர்கள் இது ஏற்கனவே பழக்கப்பட்ட சாதாரணமான மசாலா கதை என்றார்கள்.
அனைத்து வகையான விமர்சனத்தையும் தகர்த்தெறிந்து வசூலில் 1000 கோடியை அசாட்டாக தாண்டி பட்டையை கிளப்பியது ஜவான். இதன் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளர்களின் விருப்பத்தேர்வு ஆனார் அட்லீ.
இவரின் பார்வை நம் மீது படாதா என பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கு தளபதி அரசியல் அறிவிப்பை வெளியிட்டதும் அண்ணனை காண ஓடோடி வந்த பாசமலர் அட்லீயை, விஜய் 69 படத்திற்கு ஒப்புக்கொள்ள தான் இங்கு வந்திருக்கிறார் என தப்பு கணக்கு போட்டனர் மீடியாக்கள்.
விஜய்யோ கடைசியாக ஒரு படம் பண்ணிவிட்டு இனி நடிப்பதாக இல்லை என்று அதிரடியாக அறிவித்துவிட்டார். அந்த கடைசி படத்தையும் ஹச் வினோத் மற்றும் தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இவர்களில் ஒருவர் தான் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதனால் ஹேப்பியான அட்லீ பாசமலருக்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
அட்லீ பாலிவுட்டில் வேற லெவல்ல போய்விட்டார்! சம்பளமே 100 கோடி கேட்பார்! இங்கிருக்கும் தயாரிப்பாளர்களோ 20 அல்லது 30 கோடிக்கு மேல் கொடுக்க மாட்டார்கள் என கொளுத்தி போட்டது சில கும்பல்.
ஆனால் வதந்திகளை பொய்யாக்கிய அட்லீ, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஒப்புக்கொண்டு உள்ளார். இதற்காக இவருக்கு 60 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளது.