பொழுதுபோக்கு

முதல்முறையாக ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணையும் ‘Mr.X’ அப்டேட் வெளியானது…

ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும்  ‘Mr.X’ படத்தின் ஷட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘Mr.X’. இரு கதாநாயகர்கள் நடிக்கும் இப்படத்தை ‘எப்.ஐ.ஆர்’ படத்தை  இயக்கிய மனு ஆனந்த் இயக்கி வருகிறார்.

இணையத்தள குற்றத்தை மையமாக வைத்து ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

mrx

இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், கெளதம் கார்த்திக் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் அனகா ஆகிய இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிரபல நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தன்வீர் வீர் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.

mrx

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் தொடங்கியது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் மல்டி ஸ்டார் படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

mrx

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content