இடைநீக்கப்பட்ட தென் கொரிய ஜனாதிபதியைக் கைது செய்யுமாறு பிடியாணை!
இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவ சட்டத்தை விதிப்பதற்கான தனது முடிவை யூன் சுக் அறிவித்தார்.
இந்த நிலையில், அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது அந்நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
அதன் தொடர்ச்சியாகவே அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அதனைத் தென் கொரிய நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
பிடியாணை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அந்நாட்டு உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அதேவேளை, தென் கொரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் பிடியாணை இது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)