அனுபமாவுக்கு 20 வயது பெண்ணால் நடந்த அதிர்ச்சி சம்பவம்…
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மார்பிங் புகைப்படங்களை பரப்பி வந்த 20 வயது பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“சில நாட்களுக்கு முன்பு என்னுடைய பெயரைக் கொண்ட போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னைப் பற்றியும், என் குடும்பம் குறித்தும், நண்பர்கள், சக நடிகர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதை அறிந்தேன்.

அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டிருந்தனர். மன வேதனை அடைந்தேன்.
இது தொடர்பாக கேரள சைபர் க்ரைம் குற்றப் பிரிவில் புகார் அளித்தேன். உடனே அவர்கள் களமிறங்கி இந்த போலி சமூக வலைதள கணக்குகளுக்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த நபர் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையெல்லாம் செய்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் என்ற தகவல் அதிர்ச்சியாக உள்ளது.
அவரது வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பகிரங்கப்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.







