ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான மற்றொரு அறிகுறி – கன்சர்வேடிவ் விசனம்

டவுனிங் ஸ்ட்ரீட் தகவல் தொடர்பு பணிப்பாளர் டிம் ஆலன் (Tim Allan)  திடீரென பதவி விலகியுள்ள நிலையில் பிரதமர் ஸ்டார்மர் தனது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான மற்றொரு அறிகுறியென  கன்சர்வேடிவ் தலைவர் கெமி படேனோக் (Kemi Badenoch) விமர்சித்துள்ளார்.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பிலான வெளிப்பாடுகள் பிரித்தானியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் ஸ்டார்மரின் மிக நெருக்கமான அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னால் தொழிற்கட்சி உறுப்பினர் மண்டேல்சனின், எப்ஸ்டீனுடனான தொடர்புகள் பற்றிய வெளிப்பாடுகளுக்குப் பிறகு பலவீனமடைந்த  தனது அதிகாரத்தை வலுப்படுத்த பிரதமர் ஸ்டார்மர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிரதமர் ஸ்டார்மர் தனது வேலையில் மிகுந்த கவனம் செலுத்துவார் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

டவுனிங் ஸ்ட்ரீட் தகவல் தொடர்பு பணிப்பாளர் டிம் ஆலன் (Tim Allan)  திடீரென பதவி விலகியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர், பிரதமரின் தலைமை ஆலோசகர் மோர்கன் மெக்ஸ்வீனி, 2024 ஆம் ஆண்டு பீட்டர் மண்டேல்சனை அமெரிக்க தூதுவராக நியமிக்க உதவியதற்காக பதவி விலகினார்.

ஆலன் தனது பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டு, பிரதமர் மற்றும் அவரது குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும் பிரதமர், பதவி விலகுவாறா என்ற கேள்விக்கு, இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!