ஜப்பானில் மற்றுமொரு ஆஸ்திரேலிய பிரஜை பலி!
மெல்போர்னைச் சேர்ந்த 27 வயதான மைக்கேல் “மிக்கி” என்ற இளைஞர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது உடல்நலக்குறைவுக்கு உள்ளான அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சையளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கைகள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
ஜப்பானில் ஸ்கை விளையாட்டில் ஈடுபட்டு உயிரிழந்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் இவராவார்.
ஜப்பான் கடுமையான பனிப்பொழிவு பருவத்தை அனுபவித்து வருகிறது, இது சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளது, ஆனால் விபத்துக்கள் மற்றும் இறப்புகள் அதிகரிக்கவும் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





