நம் நாட்டு கலைஞர்களின் மற்றுமொரு படைப்பு “அன்பாய் தொலைத்த”….
நம் இலங்கைத்தீவு இன்று உலகளாவிய ரீதியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றது என்றால் மிகையாகாது.
வணிக ரீதியாகவும், சுற்றுலாத்துறை மூலமாகவும், கலை கலாச்சாரங்கள் மூலமாகவும், படிப்பு, தொழில் என எல்லா துறைகளிலும் நம்மவர்கள் முன்னேறி வருகின்றார்கள்.
அந்த வகையில் சினிமாத்துறையை எடுத்துக்கொண்டால் நம்நாட்டு படைப்புகள் உலகளவில் பிரபல்யமடைகின்றன. சிறந்த கலைஞர்களையும் உருவாக்குகின்றது.
நம் கலைஞர்களின் தீவிர முயற்சியால் உருவாகிய எத்தனையோ படங்கள், பாடல்கள் என அனைத்துக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில் இலங்கையர்களின் படைப்பான DH Studios தயாரிப்பில் “அன்பாய் தொலைத்த” அல்பம் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.
• பாடல் தலைப்பு :- ‘ஏலே ஏலே லோ”
• நடிகர்கள் :- ஹாரி எஸ்.கே., டிம்னா சாண்ட்ரின்
• பாடகர் :- ஜூலியஸ் ஞானகர்
• பாடலாசிரியர் :- ஸ்ரீ சனா
• இசையமைப்பாளர் & ஒழுங்கமைப்பு & திட்டமிடல் :- மெல்வின் மிராண்டா
• ஒலிப்பதிவாளர் :- தர்ஷன் ஸ்ரீ
• ஒலிப்பதிவு கூடம் :- M8 Studio (இலங்கை)
• ஒளிப்பதிவாளர் :- தியா & மெல்வின்
• படத்தொகுப்பாளர் & மென்திரையமைப்பாளர் (DI) :- ஹாரி
• தயாரிப்பாளர் :- ஹாரி எஸ்.கே.
• தயாரிப்பு நிறுவனம் :- DH Studios
இப்பாடலுக்கு சிறந்த பகிர்வையும், ஆதரவையும் அளித்து எம் தாய் நாட்டு கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இவர்களது படைப்புக்கும், இனிவரும் காலங்களில் அடைய இருக்கும் வெற்றிக்கும் எமது பாராட்டுக்கள்.





