உச்சக்கட்ட தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா : களமிறங்கிய தி போன்’ (The Bone’) விமானம்!
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஈரான் மீதான தாக்குதல்களில் “எழுச்சி” ஏற்படும் என்று எச்சரித்ததை அடுத்து, 24 க்ரூஸ் ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடிய அமெரிக்க குண்டுவீச்சு விமானமான ‘தி போன்’ (The Bone’) இங்கிலாந்தில் தரையிறங்கியுள்ளது.
146 அடி நீளமுள்ள B-1 லான்சர் 137 அடி இறக்கைகள் கொண்டதாகவும், 86 டன் எடையையும் கொண்டது. அத்துடன் குறித்த குண்டு வீச்சி விமானமானது, மணிக்கு 900 மைல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
குறித்த விமானத்தில் இலக்குகளைத் தாக்க உதவும் மேம்பட்ட ரேடார் மற்றும் ஜிபிஎஸ் அமைப்புகளையும், மின்னணு ஜாமர்கள் (electronic jammers), ரேடார் எச்சரிக்கைகள் மற்றும் எதிரிகளிடமிருந்து கண்டறிதலைத் தவிர்க்க ஒரு டிகோய் (decoy) அமைப்பையும் கொண்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குழுவினரால் இயக்கப்படும் இந்த விமானம் இதற்கு முன்னதாக சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





